பள்ளி வேனில் மயங்கி கிடந்த இந்திய சிறுவன் - யாரும் கவனிக்காததால் உயிரிழந்த பரிதாபம்

பள்ளி வேனில் மயங்கி கிடந்த இந்திய சிறுவன், யாரும் கவனிக்காததால் பரிதாபமாக உயிரிழந்தான்.
பள்ளி வேனில் மயங்கி கிடந்த இந்திய சிறுவன் - யாரும் கவனிக்காததால் உயிரிழந்த பரிதாபம்
Published on

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் அல் கராமா நகரில் வசித்து வருபவர் பைசல். கேரளாவைச் சேர்ந்த இவர் துபாய் மற்றும் கேரளாவில் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகிறார். இவரது 3-வது மகன் மொஹம்மத் பர்கான் பைசல் (வயது 6). இவன் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான்.

நேற்றுமுன்தினம் வழக்கம்போல பள்ளிக்கு செல்வதற்காக காலை 8 மணிக்கு பள்ளி வேனுக்குள் மொஹம்மத் பர்கான் பைசல் ஏறினான். வேன் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் சிறுவன் திடீரென மயங்கினான். ஆனால் அவனை யாரும் கவனிக்கவில்லை.

வேன் பள்ளி சென்றதும், மற்ற மாணவர்கள் அனைவரும் இறங்கி பள்ளிக்கு சென்றுவிட்டனர். அப்போதும் கூட சிறுவனை யாரும் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் பிற்பகல் 3 மணியளவில் பள்ளி மாணவர்களை மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக வேனை இயக்கிய போதுதான், உள்ளே மொஹம்மத் பர்கான் பைசல் மயங்கிய நிலையில் கிடப்பதை டிரைவர் பார்த்துள்ளார்.

உடனடியாக அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மாணவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com