ரூ.23 கோடி மோசடி வழக்கில் இந்தியர் குற்றவாளி: அமெரிக்க கோர்ட்டு அறிவிப்பு

ரூ.23 கோடி ரூபாய் பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து யோகேசை போலீசார் கைது செய்தனர்.
ரூ.23 கோடி மோசடி வழக்கில் இந்தியர் குற்றவாளி: அமெரிக்க கோர்ட்டு அறிவிப்பு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் வசிப்பவர் யோகேஷ் பஞ்சோலி (வயது 43). இந்திய வம்சாவளியான இவர் அங்கு ஷ்ரிங் ஹோம் கேர் இன்க் என்ற சுகாதார காப்பீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தனது நிறுவனத்தின் மூலம் சுமார் ரூ.23 கோடி பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு அங்குள்ள மிக்சிகன் மாகாண கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அவரது குற்றச்சாட்டை கோர்ட்டு உறுதி செய்துள்ளது. எனவே யோகேசுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com