ஆஸ்திரேலிய ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை - போலீசார் அதிரடி

ஆஸ்திரேலிய ரெயில் நிலையத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்.
ஆஸ்திரேலிய ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை - போலீசார் அதிரடி
Published on

சிட்னி,

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அப்ரன் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு நேற்று (செவ்வாய்கிழமை) வந்த நபர் ரெயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த துய்மைப்பணியாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்.

இந்த தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, அந்த நபர் போலீசார் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டார். இதையடுத்து, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் முகமது ரஹ்மதுல்லா சயது அகமது (வயது 32) என்பதும் தெரியவந்துள்ளது.

தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த அகமது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com