அமெரிக்கா - விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியர்: 2 ஆண்டுகள் சிறை?

இந்த வழக்கில் இந்திய குடிமகன் வருண் அரோராவை குற்றவாளி என அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்கா - விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியர்: 2 ஆண்டுகள் சிறை?
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் விமானப் பயணத்தின்போது பெண் பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, 38 வயதான இந்திய குடிமகன் வருண் அரோரா குற்றவாளி என அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2024 ஆகஸ்டில் ரோட் தீவிலிருந்து வாஷிங்டன் சென்ற விமானத்தில், தூங்கிக் கொண்டிருந்த பெண் பயணியிடம் அவர் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

தூங்குவதுபோல நடித்தபடியே, பெண் பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. பெண் பயணி கையை அகற்றிய போதும் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் மே மாதம் தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. அவருக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com