இந்திய கடற்படையின் போர் கப்பல் ஐஎன்எஸ் திரிசூல் இங்கிலாந்து சென்றடைந்தது

இந்தியா-இங்கிலாந்து கடற்படைகளுக்கு இடையே ஆண்டுதோறும் ‘கொங்கன்’ இருதரப்பு கடல்சார் கூட்டுப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய கடற்படையின் போர் கப்பல் ஐஎன்எஸ் திரிசூல் இங்கிலாந்து சென்றடைந்தது
ஐஎன்எஸ் திரிசூல்
Published on: 

லண்டன்,

இங்கிலாந்தின் பிளைமவுத் கடற்கரையில் இந்தியா-இங்கிலாந்து கடற்படைகள் இணைந்து நடத்தும் 'கொங்கன் 2026' கூட்டுப் பயிற்சி தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக இந்திய கடற்படையின் அதிநவீன ‘ஐஎன்எஸ் திரிசூல்’ போர்க்கப்பல் இங்கிலாந்து சென்றடைந்தது.

கடல்சார் ஒத்துழைப்பு

இந்தியா-இங்கிலாந்து கடற்படைகளுக்கு இடையே ஆண்டுதோறும் ‘கொங்கன்’ இருதரப்பு கடல்சார் கூட்டுப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் கடல்சார் ஒத்துழைப்புக்கு தூணாக விளங்கும் இப்பயிற்சி, ஆண்டுக்கு ஆண்டு அதன் அளவிலும் தொழில்நுட்பத்திலும் பன்மடங்கு வளர்ந்து வருகிறது.

கொங்கன்-26

அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான ‘கொங்கன்-26’ கூட்டுப் பயிற்சி இங்கிலாந்தின் பிளைமவுத் கடற்கரையில் அக்டோபர்15-ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இத்தொடரில் பங்கேற்க, இந்தியக் கடற்படையின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை மறைமுகப் போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் திரிசூல்’ பிளைமவுத் துறைமுகத்தை சென்றடைந்தது. அங்கு இந்திய கப்பலுக்கு ராயல் நேவி அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இப்பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

துறைமுகம்

இக்கட்டத்தின் போது இரு நாட்டு அதிகாரிகள் இடையேயான தொழில்முறை கலந்துரையாடல்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மேலும், பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் பார்வையிடுவதற்காக இந்திய போர்க்கப்பல் திறந்து வைக்கப்படுகிறது.

கடல்

இதையடுத்து நடைபெறும் கடல் கட்ட பயிற்சியில் வான்வெளி, கடல் பரப்பு மற்றும் நீருக்கடியில் என மூன்று களங்களிலும் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. குறிப்பாக, அதிநவீன விமான செயல்பாடுகள், வான் பாதுகாப்பு பயிற்சிகள், தொடர் துப்பாக்கி சூடுகள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு பயிற்சிகள் உள்ளிட்ட மிகச் சிக்கலான போர் ஒத்திகைகள் அரங்கேறவுள்ளன.

மூலோபாய கூட்டாண்மை

பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக இரு நாடுகளும் கொண்டுள்ள பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இப்பயிற்சி மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மேலும், 'இந்தியா-இங்கிலாந்து தொலைநோக்கு பார்வை 2035'-ல் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கு இந்த 'கொங்கன்-26' பயிற்சி மிகச் சிறந்த உதாரணமாகதிகழ்கிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கடற்படையின் போர் கப்பல் ஐஎன்எஸ் திரிசூல் இங்கிலாந்து சென்றடைந்தது
ஐஎன்எஸ் திரிசூல்
X

Daily Thanthi
www.dailythanthi.com