தென்ஆப்பிரிக்கா; கார் ரேசிங் விபத்தில் சிக்கிய இந்திய வம்சாவளி சிறுமி கவலைக்கிடம்

தென்ஆப்பிரிக்காவில் சிறுவர் சிறுமிகளுக்கான கார் ரேசிங் விளையாட்டில் ஈடுபட்டு விபத்தில் சிக்கிய இந்திய வம்சாவளி சிறுமியின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.
தென்ஆப்பிரிக்கா; கார் ரேசிங் விபத்தில் சிக்கிய இந்திய வம்சாவளி சிறுமி கவலைக்கிடம்
Published on

டர்பன்,

தென்ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வெர்னான் கோவிந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கிறிஸ்டன் கோவிந்தர் (வயது 15). கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர் சிறுமிகளுக்கான கார் ரேசிங் விளையாட்டில் கிறிஸ்டன் ஈடுபட்டு உள்ளார்.

இதில், அவரது தலைமுடி காரில் சிக்கி கொண்டு விபத்து ஏற்பட்டு உள்ளது. பலத்த காயமடைந்த சிறுமியை ஐ.சி.யூ.வில் சேர்த்து உள்ளனர்.

அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் உடன் இருக்கும்போது, துயர சம்பவம் நடந்து உள்ளது. உடனடியாக பார்வையாளர்கள் வரிசையில் நின்றிருந்த துணை மருத்துவர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சை அளித்தனர்.

சிறுமி நன்றாக உடல்நலம் தேறி, மருத்துவமனையில் இருந்து வெளியேறி, பள்ளி கூடத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டால் போதும் என்று வெர்னான் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com