இந்திய உணவு மற்றும் பானங்கள் ஆரோக்கியமற்றது: 12 நாடுகளில் தொகுக்கப்பட்ட ஆய்வில் தகவல்

12 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட உணவு ஆய்வில் இந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்திய உணவு மற்றும் பானங்கள் ஆரோக்கியமற்றது: 12 நாடுகளில் தொகுக்கப்பட்ட ஆய்வில் தகவல்
Published on

உலகெங்கிலும் உள்ள 12 நாடுகளில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களின் சுகாதாரம் ஆய்வு செய்யப்பட்டது. ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் நடத்திய இந்த ஆய்வில், பகுப்பாய்வு செய்யப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாக்கெட் உணவுப் பொருட்களும் அடங்கும்.

இந்த ஆய்வில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களில் சர்க்கரையின் அளவு சீனர்களுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இருந்தது. அவற்றில் ஊட்டச்சத்து உள்ளடக்கம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள 12 வெவ்வேறு நாடுகளிலிருந்தும், பிராந்தியங்களிலிருந்தும் 400,000க்கும் மேற்பட்ட உணவுகள் மற்றும் பானங்களின் ஆரோக்கியத்தை இந்த கணக்கெடுப்பு ஒப்பிட்டுப் பார்த்து உள்ளது.

இதனால்தான் இந்த உணவுகள் மற்றும் பானங்களை அதிகப்படியாக பயன்படுத்துவதற்கு எதிராக சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

கூடுதல் சர்க்கரைகள், உப்புகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அடங்கிய தொகுக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வது உயர் இரத்த சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம் , உடல் பருமன் போன்ற பல கடுமையான நோய்களுக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சமையல் பொருட்களில் 100 கிராமுக்கு 1515 கேஜே ஆற்றல் இருப்பதாகவும், 100 கிராமுக்கு 7.3 கிராம் சர்க்கரை இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதிக வருமானம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் தொடர்ந்து குறைவான ஆரோக்கியமானவை என்பதைக் கண்டுபிடிப்பது கவலைக்குரிய ஒரு தீவிரமான காரணமாகும். பல்வேறு நாடுகளில் உள்ள பொருட்களின் ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணித்து அறிக்கையிட வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன என கூறப்பட்டு உள்ளது.

ஆற்றல், உப்பு, சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புகள், புரதம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களின் அளவைப் பார்த்து, ஆஸ்திரேலியாவின் ஹெல்த் ஸ்டார் மதிப்பீட்டு முறையின்படி நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டன.

இந்த தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் அமெரிக்காவின் தயாரிப்புகள் இரண்டாவது இடத்தைப் பிடித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com