அமெரிக்காவில் நடைபயிற்சிக்கு சென்ற இந்திய மாணவி மாயம்

பாஸ்டன் நகரில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு கடையில் பகுதி நேர வேலையும் செய்து வருகிறார்.
அமெரிக்காவில் நடைபயிற்சிக்கு சென்ற இந்திய மாணவி மாயம்
Published on: 

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நடைபயிற்சிக்கு சென்ற இந்திய மாணவி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் ஷதுல்லாபூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஸ்ரீஜா (வயது 23). இவர் அமெரிக்காவின் மாஸ்ஷசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்ட மேல்படிப்பு படித்து வந்தார். பாஸ்டன் நகரில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு கடையில் பகுதி நேர வேலையும் செய்து வந்தார்.

இந்திய மாணவி மாயம்

இந்நிலையில் இந்திய மாணவி ஸ்ரீஜா கடந்த 2ம் தேதி தான் தங்கியுள்ள அறையில் இருந்து வெளியேறி வழக்கமான நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். ஆனால் அன்றைய தினம் முழுவதும் ஸ்ரீஜா தனது அறைக்கு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடன் தங்கியிருந்தவர்கள் இதுகுறித்து 3ம் தேதி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான இந்திய மாணவி ஸ்ரீஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஸ்ரீஜா கடைசியாக பாஸ்டன் நகரின் கார்சன் கடற்கரை அல்லது துறைமுக பகுதிக்கு சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதால் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

X