துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி மையத்தில் இந்திய குழுவினர் ஆலோசனை

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி மையத்தில் இந்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் கிஷோர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி மையத்தில் இந்திய குழுவினர் ஆலோசனை
Published on

ஒருவருக்கொருவர் உதவி

துபாயில் எக்ஸ்போ 2020 கண்காட்சி வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு(2020) மார்ச் 31-ந் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த கண்காட்சியின் ஏற்பாடுகள் குறித்து பார்வையிட இந்திய அரசு வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் கிஷோர் தலைமையில் அமீரகத்துக்கான இந்திய தூதர் பவன் கபூர், இந்திய துணைத் தூதர் டாக்டர் அமன்புரி உள்ளிட்டோர் சென்றனர். அவர்களை அமீரக சர்வதேச ஒத்துழைப்புக்கான துணை மந்திரியும், எக்ஸ்போ 2020 கண்காட்சியின் பொது இயக்குனருமான ரீம் அல் காஷிமி வரவேற்றார்.அப்போது அவர் கூறுகையில், அமீரகம்,

இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே சிறப்பான நல்லுறவு இருந்து வருகிறது. கொரோனா உள்ளிட்ட பல்வேறு கடினமான காலங்களில் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவிகளை செய்துள்ளனர் என்றார்.

அடுத்த மாதம் நிறைவடையும்

இதையடுத்து இரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் கண்காட்சி தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டனர். இதில், இந்திய அரசு வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் கிஷோர் பேசுகையில், இந்தியாவின் பங்களிப்பு எக்ஸ்போ 2020 கண்காட்சியில் சிறப்பானதாக இருக்கும். இந்திய அரங்கு 8 ஆயிரத்து 736 சதுர மீட்டர் பரப்பளவில் கடந்த ஆகஸ்டு 2019-ம் ஆண்டு தனது கட்டுமானப்பணியை தொடங்கியது. தற்போது இதன் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) இந்த பணிகள் அனைத்தும் நிறைவடையும் என்றார்.

அதிகாரிகள் பார்வையிட்டனர்

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்படும், இந்திய அரங்கில் இந்தியாவின் 75 ஆண்டு சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு வகையான தகவல்கள் இடம் பெறும். குறிப்பாக இந்தியாவின் பல்வேறு மாநிலத்தின் சிறப்புக்களை வெளிப்படுத்தும் காட்சிகள், பாரம்பரிய யோகா குறித்த தகவல்கள் இடம்பெறும். மேலும் இந்திய கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஹோலி பண்டிகை, தீபாவளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.இந்திய அரங்கின் வெளிப்பகுதியானது 600 வடிவங்களில் பல்வேறு வண்ணங்களில் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்திய அரங்கை அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com