அமெரிக்கா: நியூயார்க் தெருவில் நடந்த இந்திய திருமண ஊர்வலம்


அமெரிக்கா: நியூயார்க் தெருவில் நடந்த இந்திய திருமண ஊர்வலம்
x

திருமண ஊர்வல வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

நியூயார்க்,

இந்திய திருமணங்கள் ஆடம்பரம் மற்றும் கொண்டாட்டத்திற்கு பெயர் பெற்றவை. வித்தியாசமான அழைப்பிதழ்கள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள் தொடங்கி ஆடம்பரமான விருந்துகள், பிரமாண்டமான ஊர்வலம் என திருமண கொண்டாட்டங்கள் களை கட்டும். சில இடங்களில் பிரமாண்ட திருமண ஊர்வலம் நடக்கும் போது சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படுவதையும் காண முடியும்.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய திருமண ஊர்வலம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அங்குள்ள வால் ஸ்டிரீட் பகுதியில் லோயர் மன்ஹாட்டன் தெருக்களில் சுமார் 400 பேர் அடங்கிய திருமண ஊர்வலம் நடைபெற்றது. மணமகனின் ஊர்வலம், பாரம்பரிய இந்திய உடையில் விருந்தினர்கள், அசத்தலான நடனம் மற்றும் பாலிவுட், பாப் இசையின் கலவையுடன் டி.ஜே. இசை என திருமண கொண்டாட்டம் களைகட்டி காணப்பட்டது.

இன்ஸ்டாகிராமில் பிரசித்தி பெற்ற குஜராத்தி நடிகர் தேவர்ஷிஷா, மணமக்கள் வந்த காரின் மேல் நடனமாடிய காட்சிகளும் உள்ளது. மணமகள் சிகப்பு லெகங்கா உடையிலும், மணமகன் பழுப்பு நிற ஷெர்வானியிலும் காணப்பட்டனர். டி.ஜே. இசைக்கு ஊர்வலமாக சென்ற அனைவரும் நடனமாடிய காட்சிகள் வீடியோவில் உள்ளது.

வைரலான இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டனர். ஒருவர், பல இந்தியர்கள் தங்கள் திருமணத்துக்காக தங்கள் வாழ்நாள் சேமிப்பை செலவழித்து போலியான பிம்பத்தை காட்ட விரும்புகிறார்கள். இது அர்த்தமற்ற செலவு என பதிவிட்டா விரும்புகிறார்கள். மற்றொரு பயனர், இது போன்ற ஊர்வலங்களை தடை செய்ய வேண்டுமென பதிவிட்டார்.

1 More update

Next Story