எவ்ளோ நீளமான முடி..! கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண், உலகிலேயே மிக நீளமான தலைமுடிக்கு சொந்தக்காரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
எவ்ளோ நீளமான முடி..! கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்
Published on

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா (வயது 46). சிறு வயது முதலே தலைமுடி வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர், முடியை பராமரிப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

சிறுவயதில் குழந்தைகளுக்கு முடியை வெட்டி விடுவார்கள். அதன்படி ஸ்மிதாவுக்கும் சிறு வயதில் முடியை வெட்டி விட்டுள்ளனர். ஆனால், 14 வயதுக்கு பிறகு தனது தலைமுடியை வெட்டுவதைத் தவிர்த்தார். இதனால் அவரது முடி தொடர்ந்து வளர்ந்து தற்போது 7 அடி மற்றும் 9 அங்குலம் உள்ளது. இதன்மூலம் உலகின் நீளமான தலைமுடியை கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

1980களில் இந்தி நடிகைகள் நீளமான முடி அலங்காரம் செய்திருப்பார்கள். அவர்களால் ஈர்க்கப்பட்டு தலைமுடியை வளர்க்கத் தொடங்கிய ஸ்மிதா, இப்போது நீண்ட தலைமுடிக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

பெண்களுக்கு அழகே நீண்ட தலைமுடிதான் எனக் கூறும் ஸ்மிதா, வாரத்திற்கு 2 நாட்கள் தலைமுடியை வாஷ் செய்வதாக தெரிவித்தார். முடியை வாஷ் செய்தல், உலர்த்துதல், சிக்கல் எடுத்தல் மற்றும் ஸ்டைலாக பின்னுதல் என இந்த நடைமுறையை செய்து முடிக்க கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆகிறதாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com