அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொலை
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தவர் மணிந்தர் சிங் ஷாஹி (வயது 31). இந்தியரான இவர் அரியானா மாநிலம் கர்னல் பகுதியை சேர்ந்தவர் ஆவார். திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான இவர், 6 மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்றார்.

இந்தநிலையில் மணிந்தர் சிங் ஷாஹி பணியில் இருந்தபோது, அவர் வேலை பார்க்கும் வணிக வளாகத்துக்குள் முகமூடி கொள்ளையர்கள் புகுந்தனர். அவர்கள் மணிந்தர் ஷாஹியை துப்பாக்கியால் சுட்டு தள்ளிவிட்டு, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதில் மணிந்தர் சிங் ஷாஹி ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com