எச்-1பி விசா நீட்டிப்பு தொடரும் என்ற அமெரிக்காவின் அறிவிப்புக்கு இந்திய வம்சாவளியினர் வரவேற்பு

எச்-1பி விசா நீட்டிப்பு தொடரும் என்ற அமெரிக்காவின் அறிவிப்புக்கு இந்திய வம்சாவளியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். #H1B | #DonaldTrump
எச்-1பி விசா நீட்டிப்பு தொடரும் என்ற அமெரிக்காவின் அறிவிப்புக்கு இந்திய வம்சாவளியினர் வரவேற்பு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். இந்த எச்-1 பி விசாக்களை வழங்குவதில் சீர்திருத்தம் என்ற பெயரில் புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு கொண்டு வரும் என கூறப்பட்டது. அதன்படி, எச்-1 பி விசா பெற்ற நபர் 6 ஆண்டுகளுக்கு பிறகு கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து விட்டால் அந்த கார்டு கிடைக்கும் வரை அமெரிக்காவில் தங்கி இருக்க முடியாது.

6 ஆண்டுகள் முடிந்ததுமே அவர் நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும். அவருக்கு ஒவ்வொரு நாட்டுக்கும் கிடைக்கும் ஒதுக்கீட்டு முறையில் கிரீன் கார்டு கிடைத்தால் அவர் மீண்டும் அமெரிக்காவுக்கு வந்து பணியை தொடரலாம். இவ்வாறு விசா நடைமுறையில் புதிய மாற்றம் கொண்டு வந்தால் எச்-1 பி விசா பெற்று இனி 6 ஆண்டு பணிபுரிந்தவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டிய நிலை இருந்தது. இது அமெரிக்க வாழ் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையினருக்கு பேரிடியாக அமைந்தது.

விசாக்களை நீட்டிப்பதில் சிக்கல் ஏற்பட்டால் ஏறத்தாழ ஏழரை லட்சம் இந்தியர்கள் நாடு திரும வேண்டிய சூழல் உருவாகும் என கூறப்பட்டது. இந்த நிலையில், எச். 1பி விசா நீட்டிப்பு கொள்கையில், மாற்றம் இல்லை என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு அறிவித்தது. அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பை அங்குள்ள இந்திய வம்சாவளியினர் வரவேற்றுள்ளனர். #H1B | #DonaldTrump

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com