

லண்டன்,
இங்கிலாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள லீசெஸ்டர் நகரை சேர்ந்தவர் சுலாகான் சிங் (வயது 39). இவரது நண்பர் சுக்விந்தர் சிங். இவர்கள் இருவரும் அங்குள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த ஜூலை மாதம் 2-ந்தேதி பணியில் இருந்தபோது இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுலாகான் சிங் கூர்மையான ஆயுதத்தால் சுக்விந்தர் சிங்கை குத்தி கொலை செய்தார்.
அதனை தொடர்ந்து, சுலாகான் சிங்கை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு லீசெஸ்டர் நகர கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் சுலாகான் சிங் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து இந்த வழக்கில் அவரை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி அவருக்கு வாழ்நாள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.