இந்தியர்கள் மிகவும் நல்ல நடிகர்கள் - அமெரிக்க மந்திரி சொல்கிறார்

அமெரிக்கா சொல்வதை இந்தியா செயல்படுத்துவதாக நடிகர்களுடன் ஒப்பிட்டு அமெரிக்க மந்திரி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் மிகவும் நல்ல நடிகர்கள் - அமெரிக்க மந்திரி சொல்கிறார்
Published on

வாஷிங்டன்,

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உயர்த்தினார்.

அதன்பின் இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதால் இந்தியா மீதான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

மேலும் ரஷிய எண்ணையை வாங்குவதை இந்தியா குறைத்துவிட்டது என்று டிரம்ப் தெரிவித்தார். இதற்கிடையே ஈரான் மீது அமெரிக்கா தொடுத்துள்ள போர் காரணமாக எரிசக்தி தட்டுப்பாட்டை தவிர்க்க ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணையை 30 நாட்களுக்கு இந்தியா கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று அமெரிக்கா அறிவித்தது. இந்தநிலையில் அமெரிக்க கருவூலத்துறை மந்திரி ஸ்காட் பெசென்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலகில் எண்ணை நன்றாக விநியோகிக்கப்படுகிறது. நேற்று எங்கள் நட்பு நாடான இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்க அமெரிக்க கருவூலத்துறை ஒப்புதல் அளித்தது. இந்தியர்கள் மிகவும் நல்ல நடிகர்களாக உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு ரஷிய எண்ணையை வாங்குவதை நிறுத்துமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டிருந்தோம். அதை அவர்கள் செய்தார்கள் அமெரிக்காவிடம் இருந்து எண்ணை வாங்க முடிவு செய்தனர்.ஆனால் உலகெங்கிலும் உள்ள தற்காலிக எண்ணை விநியோக பாதிப்பால் ரஷிய எண்ணையை வாங்கி கொள்ள நாங்கள் இந்தியாவுக்கு அனுமதி வழங்கி உள்ளோம். மற்ற ரஷிய எண்ணை மீதான தடையை நாங்கள் ரத்து செய்யலாம் என்றார்.

அமெரிக்கா சொல்வதை இந்தியா செயல்படுத்துவதாக நடிகர்களுடன் ஒப்பிட்டு அமெரிக்க மந்திரி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அதேபோல் அமெரிக்க எரிசக்தித்துறை மந்திரி கிஸ்ரைட் கூறும்போது, இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்கள் ஏற்கனவே தெற்காசியா முழுவதும் கப்பல்களில் உள்ள ரஷிய எண்ணையை எடுத்து செல்லவும், அதை சுத்திகரிக்கவும், விரைவாக சந்தைக்கு நகர்த்தவும் அமெரிக்கா அனுமதிக்கிறது.

எண்ணை விலைகளை குறைக்க உதவும் குறுகிய கால நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம் என்றார். ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணையை வாங்க அனுமதிக்க அமெரிக்கா யார் என்று கேட்டு மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com