வந்தவுடன் இலவச விசா பெறலாம்: இந்தியர்களுக்கு இலங்கை சலுகை

இலங்கைக்கு வந்தவுடன் கட்டணம் எதுவுமின்றி இலவசமாக விசா பெற்றுக்கொள்ளும் சலுகையை 39 நாட்டு மக்களுக்கு அளிக்க இலங்கை அரசு திட்டமிட்டு இருந்தது.
வந்தவுடன் இலவச விசா பெறலாம்: இந்தியர்களுக்கு இலங்கை சலுகை
Published on

கொழும்பு,

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தால், இந்த திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், இலங்கையில் சுற்றுலா துறைக்கு புத்துயிரூட்டுவதற்காக, அந்த திட்டம், ஆகஸ்டு 1ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக இலங்கை சுற்றுலா துறை மந்திரி ஜான் அமரதுங்கே நேற்று அறிவித்தார். 39 நாடுகளுடன் இந்தியா, சீனா ஆகிய நாட்டை சேர்ந்தவர்களுக்கும் இந்த சலுகையை நீட்டிப்பதாக அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com