நாசாவின் நிலவு பயண திட்டத்தின் மூத்த விஞ்ஞானியாக இந்தியாவைச் சேர்ந்த அமித் பாண்டே தேர்வு

ஆர்டெமிஸ் திட்டம் மூலம் நாசா நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை நடத்த உள்ளது.
நாசாவின் நிலவு பயண திட்டத்தின் மூத்த விஞ்ஞானியாக இந்தியாவைச் சேர்ந்த அமித் பாண்டே தேர்வு
Published on

வாஷிங்டன்,

கடந்த 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது 'அப்போலோ' திட்டம் மூலம் நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பி வரலாறு படைத்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்திற்கு 'ஆர்டெமிஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி நாசா நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை நடத்த உள்ளது. இந்த திட்டத்தின் மூத்த விஞ்ஞானியாக இந்தியாவைச் சேர்ந்த அமித் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி நகரில் பிறந்த அமித் பாண்டே, அங்குள்ள கேந்திரிய வித்யாலாயா பள்ளியில் படித்து பின்னர் வாரனாசி ஐ.ஐ.டி.யில் பி.டெக்., பட்டம் பெற்றார். தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றி வரும் அமித் பாண்டே, மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாக கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகளை இலவசமாக வழங்கி வருகிறார். தற்போது நாசாவின் நிலவு பயண திட்டத்தில் மூத்த விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அமித் பாண்டேவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com