இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம், அடுத்த ஆண்டு 6.5 சதவீதமாக இருக்கும் சர்வதேச நாணய நிதியம் கணிப்பு

2027-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கும் என்று கணிக் கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம், அடுத்த ஆண்டு 6.5 சதவீதமாக இருக்கும்
சர்வதேச நாணய நிதியம் கணிப்பு
Published on

வாஷிங்டன்,

இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடுகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது உலக வங்கி தனது மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026-27 நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP ) வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.

மேற்கு ஆசியாவில் பதற்றங்கள் அதிகரித்து வந்தபோதிலும், 2027-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் சற்று வேகமாக, அதாவது 6.5 சதவீத அளவில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், '2025-ம் ஆண்டின் வலுவான பொருளாதார செயல்பாடுகளின் தொடர்ச்சி மற்றும் இந்திய பொருட்கள் மீதான கூடுதல் அமெரிக்க வரிகள் 50 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டதன் நேர்மறையான பங்களிப்புகள் காரணமாக 2027-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கும் என்று கணிக் கப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com