இந்திய பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும் - பன்னாட்டு நிதியம் கணிப்பு

இந்திய பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும் என பன்னாட்டு நிதியத்தால் கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும் - பன்னாட்டு நிதியம் கணிப்பு
Published on

வாஷிங்டன்,

பன்னாட்டு நிதியம், இம்மாதத்துக்கான உலக பொருளாதார பார்வை என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக உயரும், அடுத்த ஆண்டு 7.7 சதவீதமாக உயரும் என்று கூறப்பட்டுள்ளது. கச்சா எண்ணை விலை வீழ்ச்சி, பணவீக்கம் சரிவு ஆகியவையே இந்த உயர்வுக்கு காரணம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதத்தில் இருந்து 6.2 சதவீதமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com