இந்தியாவின் சூரிய ஒளி மின் திட்டங்கள் உலகுக்கு முன்மாதிரி - இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பாராட்டு

இந்தியாவின் சூரிய ஒளி மின் திட்டங்கள் உலகுக்கு முன்மாதிரியாக விளங்குவதாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பாராட்டியுள்ளார்.
இந்தியாவின் சூரிய ஒளி மின் திட்டங்கள் உலகுக்கு முன்மாதிரி - இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பாராட்டு
Published on

லண்டன்,

பருவநிலை நடவடிக்கைகள் குறித்த இந்திய உலகளாவிய மன்றத்தின் அமர்வு ஒன்று நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து இளவரசரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சார்லஸ் சிறப்பு உரையாற்றி னார்.

அப்போது அவர் இந்தியாவின் சூரிய ஒளி மின் திட்டங்களை பாராட்டினார்.

இது தொடர்பாக இளவரசர் சார்லஸ் கூறியதாவது:-

இந்தியாவின் உலகளாவிய அணுகல் மற்றும் வலுவான தனியார் துறையுடன் எங்கள் முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கும், நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் சில முக்கிய வழிகள் உள்ளன என்று நான் நம்புகிறேன். முதலில் மாற்றத்தை ஆதரிக்க தனியார் மூலதனத்தின் ஓட்டத்தை விரைவுபடுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறிப்பாக சூரிய ஒளி மின் மின்சக்தி இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. அந்தவகையில் இந்தியாவின் சூரிய ஒளி மின்சக்தி திட்டங்கள் உலகின் பிற பகுதிகளுக்கு முன்மாதிரியாக விளங்குகின்றன.

தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் உலகளாவிய மையமாக இந்தியா திகழ்வதால், இயற்கையுடனும், நல்லிணக்கத்துடனும் ஆழ்ந்த தொடர்புடன் இணைந்து, உங்களுக்கு இந்த முயற்சியில் ஒரு முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக இந்தியாவின் தொழில் முனைவோர் திறமைகளின் செல்வத்தை கருத்தில் கொண்டு இதை நான் கூறுகிறேன்.

பருவநிலை நடவடிக்கை இலக்குகளை நோக்கிய நிலையான முதலீடுகளை தேடுவதற்காக தொடங்கப்பட்ட நிலையான சந்தைகள் இந்தியா கவுன்சிலில் இந்திய தொழில்முனைவோர் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் இணைய வேண்டும்.

இவ்வாறு இளவரசர் சார்லஸ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com