இந்தியா-அமீரகம் இடையிலான விமான சேவை 15-ந் தேதி வரை ரத்து: எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை காரணமாக கடந்த ஏப்ரல் 24-ந் தேதி முதல் இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இந்தியா-அமீரகம் இடையிலான விமான சேவை 15-ந் தேதி வரை ரத்து: எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு
Published on

மேலும் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் விமானங்கள் வர தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா-அமீரகம் இடையிலான விமான சேவையானது மறு அறிவிப்பு வரும் வரை ரத்து என எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்திருந்தது.இந்தநிலையில், இந்தியாவிலிருந்து அமீரகம் வருவதற்கு விமான போக்குவரத்து சேவை

வருகிற 15-ந் தேதி வரை ரத்து செய்து எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனினும் அமீரக மக்கள், அமீரக கோல்டன் விசா பெற்றவர்கள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

இதேபோல் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து விமானங்கள் அமீரகத்துக்கு வர அமீரக சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையம் வருகிற 21-ந் தேதி வரை தடை விதித்துள்ளது.சரக்கு விமானங்கள், தனியார் ஜெட் விமானங்கள் வருவதற்கு எந்த தடையும் இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com