இந்தோனேஷியா: அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து;17 பேர் பலி

தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்தோனேஷியா: அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து;17 பேர் பலி
Published on

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் 7 மாடி கொண்ட அலுவலக கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். 7 மாடி கட்டிடத்தில் தீ மளமளவென பரவியதால் வானத்தில் அடர்ந்த கரும்புகை எழுந்தது. இந்த கரும்புகை எழும்பியதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com