

ஜகார்தா,
இந்தோனேசியாவில் ஒரே நாளில் 4,185- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 லட்சமாக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தோனேசியாவில் ஒரே நாளில் 172- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 5,628- பேர் குணம் அடைந்துள்ளனர். இந்தோனாசியாவின் 34 மாகாணங்களிலும் வைரஸ் பரவல் காணப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.