

ஜகர்த்தா,
இந்தோனேசியாவில் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா பகுதிகளில் சுனாமி அலைகள் கடுமையாக தாக்கின. இதில் 43 பேர் பலியாகி உள்ளனர். பலரை காணவில்லை.
இதனால் 430க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்து உள்ளன. 9 ஓட்டல்கள் மற்றும் 10 கப்பல்களும் சேதமடைந்து உள்ளன. கிரகட்டோவா என்ற எரிமலை சீற்றத்தினால் இந்த சுனாமி அலைகள் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று தகவல் தெரிவிக்கின்றது.
இந்த பலி எண்ணிக்கை உயர கூடும் என கூறப்படுகிறது. இதற்கான காரணம் பற்றி இந்தோனேசிய புவியியல் கழகம் ஆய்வு செய்து வருகிறது.