

பெர்லின்,
ஜெர்மனியின் தென்மேற்கே ஹீடெல்பெர்க் நகரில் சொற்பொழிவு அரங்கம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே புகுந்துள்ளார். கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி அவர் அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில், பலர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டு கொன்றனர்.