ஐரோப்பாவில் இருந்தபோது '5 நாட்கள் பட்டினி கிடந்தேன்' - இன்போசிஸ் நிறுவனர் உருக்கம்

50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மற்றவர்கள் கார்களில் ‘லிப்ட்’ கேட்டு பயணித்ததாக ஐ.நா. நிகழ்ச்சியில் இன்போசிஸ் நிறுவனர் தெரிவித்தார்.
Image Courtacy: PTI
Image Courtacy: PTI
Published on

நியூயார்க்,

ஐ.நா.வில் இந்திய தூதரகம் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல தொழிலதிபரும், இன்போசிஸ் நிறுவனருமான நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், 'உங்களில் பெரும்பாலானவர்கள் பட்டினியை அனுபவித்து இருக்கமாட்டீர்கள். ஆனால் நான் அனுபவித்து இருக்கிறேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மற்றவர்கள் கார்களில் 'லிப்ட்' கேட்டே பயணித்துக்கொண்டு இருந்தேன். அப்போது பல்கேரியாவுக்கும் இன்றைய செர்பியாவுக்கும் இடையே உள்ள நிஷ் என்ற பகுதியில் 120 மணி நேரம் (5 நாட்கள்) பட்டினி கிடந்தேன்' என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் நிபுணர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com