வன்முறையை தூண்டுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை: வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா

வங்காளதேசத்தில் மதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா உத்தரவிட்டுள்ளார்.
வன்முறையை தூண்டுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை: வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா
Published on

டாக்கா,

வங்காளதேசத்தில் மதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா உத்தரவிட்டுள்ளார்.

வங்காளதேசத்தில் துர்கா பூஜா நிகழ்ச்சியின் போது இந்து கோவில்கள் மீது கும்பல் ஒன்று திடீரென தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் பலியாகினர். 22 பேர் காயம் அடைந்தனர். மேலும், 66 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. 20-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. சமூக ஊடகங்களில் மத ரீதியாக தவறான தகவல் பரவியதே கலவரம் ஏற்பட காரணம் என விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா உறுதியளித்துள்ளார். மேலும், மதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அசாதுசமான் கானுக்கு ஷேக் ஹசினா உத்தரவிட்டுள்ளார். சமூக

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com