இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி தீவிரம்

இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி தீவிரம்
Published on

ஜகார்தா

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள பெர்டாமினாவின் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக விண்ணை முட்டும் அளவிற்கு நெருப்பும், புகையும் வெளியாகின.

இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 912 பேர் வெளியேற்றப்பட்டனர். சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன, பலரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு தினங்களுக்கு பிறகும் தீ, தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனால் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் நாலாபுறமும் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com