பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகித அதிகரிப்பு நடவடிக்கை தொடரும் - ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் எச்சரிக்கை

நாணயக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே தெரிவித்தார்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகித அதிகரிப்பு நடவடிக்கை தொடரும் - ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் எச்சரிக்கை
Published on

பிராங்ஃப்ரூட்,

ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகித அதிகரிப்பு நடவடிக்கை தொடரும் என ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லகார்டே எச்சரித்துள்ளார். பொருளாதார வளர்ச்சி குறைந்தாலும் வட்டி விகித உயர்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய அவர், சர்வதேச சூழலில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஐரொப்பிய பொருளாதாரம், மேலும் பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

அடுத்த மாதம் நடைபெறும் நாணயக் கொள்கை கூட்டத்தில், வட்டி விகிதத்தை ஐரோப்பிய மத்திய வங்கி அதிகரிக்கக் கூடும் எனவும், பணவீக்கத்தை 2 சதவீதத்திற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

ஐரோப்பிய மண்டலத்தில் பணவீக்கம் அக்டோபரில் 10.6 சதவீதம் என்ற மிக உயர்ந்த நிலையை எட்டியது. இது இந்த ஆண்டு இறுதியில் 8.5 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 6 சதவீதமாகவும், 2024-ல் 2.3 சதவீதமாகவும் இருக்கும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com