உக்ரைன் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

போரை நிறுத்துமாறு ரஷியாவுக்கு அறிவுறுத்த வேண்டி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த வாரம் உக்ரைன் முறையீட்டு இருந்தது.
உக்ரைன் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
Published on

தி ஹாக்,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள 12 -வது நாளாக இன்று நீடித்து வருகிறது. ராணுவ கட்டமைப்புகளை தகர்க்கத்தான் நடவடிக்கை என்று சொல்லிக்கொண்டு ரஷியா போரில் களம் இறங்கினாலும் முக்கிய நகரங்களை சின்னாபின்னமாக்கி வருகிறது.

ராணுவ கட்டமைப்புகள் மட்டுமின்றி குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள் என தாக்குதலை விரிவுபடுத்தி, சர்வதேச கிரிமினல் கோர்ட்டின் வழக்கை எதிர்கொள்ளும் நிலையை ரஷியா தேடிக்கொண்டுள்ளது. தலைநகர் அருகே நடந்த போரில் குழந்தைகளும் பலியானது நெஞ்சை நொறுக்குகிறது.

போரை நிறுத்துமாறு ரஷியாவுக்கு அறிவுறுத்த வேண்டி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த வாரம் உக்ரைன் முறையீட்டு இருந்தது. உக்ரைன் முறையீடு மீதான விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. சர்வதேச நீதிமன்றம் என்ன மாதிரியான முடிவை அறிவிக்கப் போகிறது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com