

நியூயார்க்,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் நேற்று 7-வது நாளாக நீடித்தது. இந்த போர் உலக அளவில் பொருளாதாரத்தில் பெருத்த தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடங்கிய முதல் நாளிலேயே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர தொடங்கியது.
போருக்கு முன்புவரை 94 டாலராக இருந்த கச்சா எண்ணெய் ஒரே நாளில் 100 டாலரை கடந்ததுடன் தொடர்ந்து அதிகரித்தும் வந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று இந்த விலை மேலும் அதிகரித்து 110 டாலரை எட்டி விட்டது. இது உலக அளவில் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.