

கீவ்,
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இன்று, ட்ரோன் ஒப்பந்தம் மற்றும் குறிப்பாக நெதர்லாந்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் முதலாவது கூட்டு தயாரிப்பு பணிகளை தொடங்குவதற்கான ஒப்பந்தங்களின் மூலம், நெதர்லாந்துடனான நமது கூட்டாண்மை மேலும் ஆழமடைந்து வருகிறது.
நெதர்லாந்து வழங்கிய அனைத்து ஆதரவிற்கும், இந்த வருகைக்கும், அத்துடன் இன்று நமது மக்கள் அனைவரின் சார்பாக பெற்று பெருமை கொண்ட நான்கு சுதந்திரங்களுக்கான விருதுக்கும் நான் நெதர்லாந்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
உக்ரைன் மீது அவர்கள் கொண்டுள்ள கனிவான அணுகலுக்கும், நமது போராட்டத்திற்கு அவர்கள் அளிக்கும் ஆதரவிற்கும், மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர், மந்திரி ராப் ஜெட்டன் மற்றும் நெதர்லாந்து மக்கள் அனைவருக்கும் நான் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் விமானப் போக்குவரத்து துறையில் நீங்கள் வழங்கும் உதவிகள், நமது நகரங்களிலும் சமூகங்களிலும் உள்ள மக்களின் உயிர்களை ஒவ்வொரு நாளும் காப்பாற்றி வருகின்றன.
எங்கள் பக்கம் உறுதுணையாக நின்றதற்கும், நமது பொதுவான சுதந்திரத்தை பாதுகாப்பதில் உதவியதற்கும் உங்களுக்கு நன்றி.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.