ரஷிய விண்கலம் இணைந்தபோது சர்வதேச விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டை இழந்தது

சர்வதேச விண்வெளி நிலையம் 45 நிமிடம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நாசா ஆகஸ்ட் 3 வரை தனது திட்டங்களை ஒத்திவைத்து உள்ளது.
ரஷிய விண்கலம் இணைந்தபோது சர்வதேச விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டை இழந்தது
Published on

வாஷிங்டன்

ரஷிய விண்கலம் இணைந்தபோது சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் 45 நிமிடங்களுக்குக் கட்டுப்பாட்டை இழந்ததாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது. வியாழனன்று ரஷியாவின் ஆய்வு விண்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டது.

அப்போது சர்வதேச விண்வெளி நிலையம் 45 நிமிடங்களுக்கு பூமியுடனான கட்டுப்பாட்டை இழந்ததாகவும், அதன்பின் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகவும் நாசாவும், ரஷியச் செய்தி நிறுவனமும் தெரிவித்துள்ளன.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரண்டு ரஷிய விண்வெளி வீரர்கள், மூன்று நாசா விண்வெளி வீரர்கள், ஒரு ஜப்பானிய விண்வெளி வீரர் மற்றும் ஒரு ஐரோப்பிய விண்வெளி வீரர் என மொத்தம் 7 விண்வெளி வீரர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள விண்வெளி வீரர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் நாசாவை ஆகஸ்ட் 3 வரை தனது திட்டங்களை ஒத்திவைத்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com