சட்டவிரோத தகவல்களை கொண்ட 33 ஆயிரம் மொபைல் ஆப்களை நீக்கிய சீனா

சட்டவிரோத தகவல்களை கொண்ட 33 ஆயிரம் மொபைல் ஆப்களை சீனா நீக்கியுள்ளது.
சட்டவிரோத தகவல்களை கொண்ட 33 ஆயிரம் மொபைல் ஆப்களை நீக்கிய சீனா
Published on

பெய்ஜிங்,

சீனாவில் இணையதளங்களில் ஆபாச படங்கள், சூதாட்டம், மோசம் நிறைந்த காட்சிகள் மற்றும் சட்டவிரோத விளையாட்டுகள் ஆகியவை அதிகம் உள்ளன என புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து கடந்த டிசம்பரில் இருந்து இவற்றை நீக்க சீன இணையவெளி நிர்வாகம் (சி.ஏ.சி.) நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியது.

இதுபற்றி அந்நிர்வாகம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீங்கிழைக்கும் 23 லட்சம் வலைதளங்களுக்கான இணைப்புகள் தடை செய்யப்பட்டு உள்ளன. இதேபோன்று சமூக நெட்வொர்க் தளங்களில் ஆபாச மற்றும் பிற சீர்கேடுகளை உருவாக்கும் 2.47 கோடி பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன. 30 லட்சம் கணக்குகள் மூடப்பட்டு உள்ளன.

ஆபாச படங்கள், சூதாட்டம், மோசம் நிறைந்த காட்சிகள் மற்றும் சட்டவிரோத விளையாட்டுகள் ஆகியவற்றை கொண்ட சட்டவிரோத முறையிலான 33 ஆயிரம் மொபைல் ஆப்கள் நீக்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

தொடர்ந்து, அப்ளிகேசன் ஸ்டோர்கள் மற்றும் சமூக நெட்வொர்க் தளங்கள் வலிமையான ஆய்வினை செய்து, தங்களது தளங்களில் சட்டவிரோத ஆப்கள் பரவலை தடுக்க வேண்டும் மற்றும் தூய்மையான ஆன்லைன் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com