இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்: மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம்

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் பல பகுதிகளில் அபாய எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன
Photo Credit: AFP
Photo Credit: AFP
Published on

அமெரிக்கா - ஈரான் போரை நிறுத்தும் வகையில் இடைக்கால ஏற்பாடாக தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அமைதிப்பேச்சுவார்த்தை நீடித்து வரும் நிலையில், அவ்வப்போது அங்கு தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் கோபம் அடைந்த ஈரான், அந்த நாட்டின் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல், மீண்டும் தீவிர மோதல் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ஈரான் தொடர்பான அமெரிக்கா - இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சிகளுக்கும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

ஏவுகணை தாக்குதல்

அமெரிக்காவின் வேண்டுகோளை மீறி, இஸ்ரேல் நேற்று பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்த நிலையில், அதற்கு அடுத்த நாளே இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து ஈரானின் புரட்சிகர காவல்படை வெளியிட்ட அறிக்கையில், “இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மீண்டும் தொடருமானால், எங்களின் பதிலடி மிகவும் விரிவானதாக இருக்கும். ” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பதற்றம்

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் பல பகுதிகளில் அபாய எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன. இதையடுத்து மக்கள் பாதுகாப்பு முகாம்கள் மற்றும் பதுங்கு இடங்களுக்கு விரைந்தனர். இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட தகவலின்படி, மூன்று கட்டங்களாக ஏவப்பட்ட ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன. வடக்கு பகுதிகளில் பல வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறைந்தது 10 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு கடுமையான மற்றும் சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com