குவைத் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின.
குவைத் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்
Published on

குவைத் சிட்டி,

குவைத் நாட்டின் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதாக ஈரான் அறிவித்தது.

இதையடுத்து, இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், ஹர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், குவைத் மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது.

குவைத் மீது ஈரான் தாக்குதல்

இந்நிலையில், குவைத் மீது ஈரான் இன்றும் தாக்குதல் நடத்தியுள்ளது. குவைத்தின் வடக்கு பகுதியில் உள்ள நகரங்களை குறிவைத்து ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலை ஈரான் வான் பாதுகாப்பு அமைப்பு நடு வானில் சுட்டு வீழ்த்தியது. ஆனாலும், டிரோன்களின் பாகங்கள் குடியிருப்புகள் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தின. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும், குவைத் மீதான ஈரானின் தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com