ஈரான்: பஸ் கவிழ்ந்து 11 பேர் பலி

பஸ் ஓட்டுநருக்கு மயக்கம் ஏற்பட்டு இந்த விபத்து நடந்துள்ளது என்று கூறினர்.
ஈரான்:  பஸ் கவிழ்ந்து 11 பேர் பலி
Published on: 

தெஹ்ரான்

ஈரானில் பஸ் கவிழ்ந்ததில் 11 பேர் பலியாகி உள்ளனர்.

ஈரானின் மத்திய மர்காஜி மாகாணத்தில் சவே-ஹமீதன் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் பஸ்சில் இருந்த 11 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி மாகாண போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

ஓட்டுநருக்கு மயக்கம்

இதில், பஸ் ஓட்டுநருக்கு மயக்கம் ஏற்பட்டு இந்த விபத்து நடந்துள்ளது என்று கூறினர். ஈரானில், போக்குவரத்து ஒழுங்குமுறைகளை சரியாக மதிக்காதது, போதிய அவசரகால சேவை வசதிகள் இல்லாதது உள்ளிட்டவற்றால் விபத்துகள் நடக்கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனால், ஆண்டுக்கு 17 ஆயிரம் பேர் வரை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com