அணு ஆயுத சோதனையா? ஈரானில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஈரான் - இஸ்ரேல் இடையே ஒருவாரத்திற்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது.
அணு ஆயுத சோதனையா? ஈரானில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Published on

தெஹ்ரான்,

ஈரான், இஸ்ரேல் நாடுகள் மோதல் உச்சத்தில் உள்ளது இருநாடுகளும் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் நிலையில், வடக்கு ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மற்றொரு நிலநடுக்கம், செம்னான் மாகாணத்தில் இருந்து 22 மைல் தொலைவில் ஏற்பட்டுள்ளது.

இங்கு தான் விண்வெளி மையம் மற்றும் ஏவுகணை வளாகம் அமைந்துள்ளது. மேலும், அதன் அதிர்வுகள் சோர்கே நகரைச் சுற்றிலும் உணரப்பட்டு உள்ளது. சோர்கே நகரம் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 150 கி.மீ., தொலைவில் உள்ளதாகும். நிலநடுக்கங்களினால் எவ்வித சேதமோ, உயிரிழப்போ ஏற்பட்டதா என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியாகவில்லை. திடீரென அடுத்தடுத்து ஏற்பட்டு இருக்க கூடிய நிலநடுக்கத்தால் அணு ஆயுத சோதனை எதுவும் நடத்தபட்டதா என்ற சந்தேகங்களும் எழுப்பபடுகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com