"சிவப்பு கோட்டை தாண்டிய ஈரான்" - எலான் மஸ்க்கை வைத்து பெரிய பிளான் போடும் டிரம்ப்


Iran crossed the red line - Trump makes big plan with Elon Musk
x

ஈரான் நிலைமை குறித்து அமெரிக்க அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

ஈரான் சிவப்பு கோட்டை தாண்டிவிட்டதாகவும், அமெரிக்கா இதனை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ள நிலையில், ஏர்போர்ஸ் ஒன் (Airforce one) விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானில் உள்ளவர்கள் தலைவர்களா? அல்லது வன்முறை மூலம் ஆட்சி செய்கிறார்களா? என்பது தனக்குத் தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.

ஈரான் நிலைமை குறித்து அமெரிக்க அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். ஈரானில் வன்முறையை தடுக்க இணையதள சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டார்லிங்க்கை ஈரானுக்கு அனுப்புவது குறித்து எலான் மஸ்குடன் பேசப்போவதாக டிரம்ப் தெரிவித்தார்.

1 More update

Next Story