

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி அரசு முறை பயணமாக கியூபா நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தலைநகர் ஹவானாவில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் மிகுவல் டயசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு தரப்பு உறவுகளை ஆழப்படுத்தவும், வெளியுறவு அமைச்சகம் மூலம் ஆலோசனைகளை விரிவுபடுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் 5 வர்த்தக ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டனர்.