அஜர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

பள்ளி, விமான நிலையம் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அஜர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்
Published on

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கு, மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில்,அஜர்பைஜான் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. பள்ளி, விமான நிலையம் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் இரு நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரானில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் அஜர்பைஜானின் நக்சிவன் என்ற பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது.

இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் இஸ்லாமிய குடியரசு தெளிவுபடுத்தி, விளக்கமளிக்க வேண்டும். எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கத் தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஈரானுக்கு எதிராக பதிலடி நடவடிக்கை எடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளதாகவும் அஜர்பைஜான் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com