குவைத் அரசின் வளாகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

ஈரான் தனது நிலையில் மாறுபடாமல் பின் வாங்காமல் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
குவைத் அரசின் வளாகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு
Published on

குவைத்,

அமெரிக்க-இஸ்ரேல் நாடுகள் ஈரானுடன் போர் நடத்தி வரு கின்றன. மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து கடந்த பிப்ரவரி 28-ந் தேதி தொடங்கிய வான் வழி தாக்குதல்கள் முடிவின்றி சென்று கொண்டு இருக்கிறது.

ஈரான் தனது நிலையில் மாறுபடாமல் பின் வாங்காமல் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. விமான நிலையங்களை குறி வைத்த பிறகு கப்பல் துறைமுகங்கள் எண்ணெய் வளங்கள் நிறைந்த பகுதிகளை அதிரடியாக தாக்கி வருகிறது. இதில் அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் எவ்வளவு தாக்கினாலும் இடைமறிப்பு செய்வதை நிறுத்த மாட்டோம் என அதனை சிறப்புடன் செய்து வருகின்றன.

இந்த நிலையில், குவைத் நாட்டின் பல்வேறு அமைச்சக அலுவலகங்கள் அடங்கிய அரசு வளாகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பெரும் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் இத்தாக்குதலில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கையாக அதில் பணிபுரியும் ஊழியர்கள் தற்காலிகமாக வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com