ஈரான்: பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இசைக்கலைஞருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

கடவுளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் மீது ஈரான் அரசு குற்றஞ்சாட்டியது.
ஈரான்: பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இசைக்கலைஞருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
Published on: 

தெஹ்ரான்,

ஈரானில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இசைக்கலைஞருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இசைக்கலைஞர்

ஈரான் நாட்டின் கெர்மான் நகரை சேர்ந்த இசைக்கலைஞர் அலி சினா முஸ்தபாவி (வயது 38). இவர் மலையேற்ற வீரராகவும் அறியப்பட்டார்.

இதனிடையே, அலி சினா முஸ்தபாவி கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஈரான் அரசுக்கு எதிராக நடந்த போராடங்களில் பங்கேற்றார். அதேவேளை, கடந்த மார்ச் 24ம் தேதி கெர்மான் நகரில் உள்ள சதுக்கத்தில் பொதுமக்கள் மீது அலி சினா துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், ஏப்ரல் 21ம் தேதி ராணுவ வீரர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் கூறி ஈரான் போலீசார் கைது செய்தனர். மேலும், அலி சினா இஸ்ரேல், அமெரிக்காவுடன் இணைந்து அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் ஈரான் அரசு குற்றஞ்சாட்டியது.

தூக்கு தண்டனை நிறைவேற்றம்

இந்நிலையில், அலி சினா முஸ்தபாவிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. கடவுளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறி இசைக்கலைஞர் அலி சினா முஸ்தபாவிக்கு ஈரான் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com