ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றவாளிகள் முகமது மசூம் ஷாகி மற்றும் ஹமீத் வலீதி ஆகிய இருவருக்கு இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
Published on

தெஹ்ரான்,

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போர் நீடித்தது. கடந்த 7-ந்தேதி இரண்டு வார இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் இஸ்ரேல் உளவுத்துறையுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஈரான் அரசு இன்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் தொடங்கியதிலிருந்து ஈரானில் இதுபோன்ற மரண தண்டனைகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இதன்படி இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றவாளிகள் முகமது மசூம் ஷாகி மற்றும் ஹமீத் வலீதி ஆகிய இருவருக்கு இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் நீதித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், இஸ்ரேலின் உளவுத் துறையான மொசாட் அமைப்புடன் இருவரும் தொடர்பில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com