

தெக்ரான்,
தெஹ்ரானில் டிரம்பை சிறையில் அடைத்தது போன்று ஈரான் காட்சிபடுத்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய கிழக்கு போரில் ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதலை நடத்தியது.இதற்கு பதிலடியாக வளை குடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கியது. தற்போது தாக்குதல் நடக்கவில்லை யென்றாலும் இரு நாடுகள் இடையே போர் பதற்றம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, சிறையில் அடைத்தது போன்ற விளம்பர பலகை ஈரான் தலைநகர் தெக்ரா னில் வைக்கப்பட்டு உள்ளது. தஜ்ரிஷ் சதுக்கத்தில் ஒரு விளம்பர பலகை அருகே சிறைச்சாலை வடிவில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.
அதற்குள் டிரம்ப் போல வேடமிட்ட ஒருவர் இருக்கிறார்.டிரம்ப் முகமூடி-விக் ஆகியவற்றை அணிந்து உள்ளார்.படுக்கை, கழிப்பறை மற்றும் கைகழுவும் தொட்டியுடன் பொருத்தப்பட்டுள்ள அந்த கூண்டின் உள்ளே, டிரம்ப் போன்ற அந்த நபர் கம்பிகள் அருகே நிற்கிறார். பின்னர் படுத்து உறங்குகிறார். இது பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இதை மக்கள் தங்களது செல்போன்களில் புகைப்ப டம், வீடியோ எடுத்தனர்.
கூண்டின் பின்னால் உள்ள ஒரு மின்னணு விளம் பரப்பலகையில் கடந்த மாதம் தெற்கு ஈரானில் ஒரு திருமண விழா மீது நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதல் தொடர்பான படங்கள் ஒளி பரப்பப்படுகின்றன.