

துபாய்
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படை தாக்குதல் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி தொடங்கியதில் இருந்து ஈரானின் வான்வெளி மூடப்பட்டிருந்தது.
தற்போது அமெ ரிக்கா ஈரான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியுள்ள நிலையில், கடந்த ஏழு வாரங்களாக மூடப்பட்டிருந்த தனது நாட்டு வான்வெளியை ஈரான் பகுதி அளவு திறந்துள்ளதாக அந்நாட்டு அரசு நாளிதழ் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது ஈரானின் கிழக்கு வான்வழிப் பாதைகள் காலை 7 மணி முதல் திறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஈரானில் உள்ள விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் படிப்படியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.