டொனால்டு டிரம்ப் அமெரிக்காவை அழிவு பாதைக்கு அழைத்து சென்றுவிட்டார் - ஈரான் அதிபர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நாட்டையே அழிவு பாதைக்கு அழைத்து சென்றுவிட்டதாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
Image courtesy : britannica.com
Image courtesy : britannica.com
Published on

தெஹ்ரான்

அமெரிக்காவில் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி அங்கிருக்கும் நாடாளுமன்றத்தில் நடந்தது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு இருந்தன.

அப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தை நோக்கி டிரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வர, இதைக் கண்ட போலீசார் அவர்களை விடாமல் தடுத்து நிறுத்தினர்.இதனால் டிரம்ப்பிற்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளும் ஏற்பட்டதால், கூட்டத்தைக் கலைக்கும் வகையில் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர்.

இச்சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஈரான் அதிபர் ஹசன் ருஹானி இதுகுறித்து கூறியதாவது:-

நாம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டது மேற்கத்திய ஜனநாயகம் எவ்வளவு பலவீனமானது மற்றும் பாதிக்கப்படக்கூடியது என்பதைக் காட்டுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் டிரம்ப் நாட்டையே அழிவுப் பாதைக்கு அழைத்து சென்றுவிட்டார். அடுத்து வெள்ளை மாளிக்கைக்கு வருபவர் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன். புதிதாக வருபவர்கள் அமெரிக்காவை மீட்டெடுக்க வேண்டும். ஏனெனில் அமெரிக்கா சிறந்த தேசமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com