இஸ்ரேல் தாக்குதல் - ஈரான் ராணுவ அதிகாரி உயிரிழப்பு


Iran Revolutionary Guards chief Hossein Salami killed
x

இன்னும் பல ராணுவ அதிகாரிகள் உயிரிழந்து இருக்கலாம் என உள்ளூர் மீடியா தகவல் தெரிவித்திருக்கிறது.

தெஹ்ரான்,

மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.

அந்நாட்டு அரசு தொலைக்காட்சி, குண்டுவெடிப்பை உறுதி செய்துள்ளது. ஈரானின் தெஹ்ரானில் மக்கள் குண்டுவெடிப்பு சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர்.

இந்த தாக்குதலில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹொசைன் சலாமி உயிரிழந்திருப்பதாக முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பல ராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகம் கூறி இருக்கிறது.

இந்த சூழலில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து , ஈரன் மற்றும் இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

1 More update

Next Story