ஈரானில் இன்று மேலும் 2,598 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஈரானில் இன்று மேலும் 2,598 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரானில் இன்று மேலும் 2,598 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
Published on

தெஹ்ரான்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,82,83,996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 6,93,783 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ஈரான் நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,598 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஈரானில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 3,12,035 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 215 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 17,405 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இதுவரை 2,70,228 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 24,402 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ஈரான் 11வது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (48,15,776 பேர்), இரண்டாம் இடத்தில் பிரேசிலும் (27,33,677 பேர்), மூன்றாவது இடத்தில் இந்தியாவும்(18,22,112 பேர்) உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com