

தெஹ்ரான்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போர் நீடித்தது. கடந்த 7-ந்தேதி இரண்டு வார இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் போரில் ஈரானில் 3375 உயிரிழந்ததாக ஈரானின் சட்டப்பூர்வ மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் அப்பாஸ் மஸ்ஜெதி இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-
‘இறந்தவர்களில் 2875 பேர் ஆண்கள், 496 பேர் பெண்கள், 383 பேர் 18 வயது மற்றும் அதற்கும் குறைந்த வயதுடையவர்கள். இன்னும் 4 உடல்கள் அடையாளம் கண்டறியப்படவில்லை. இதில் வீரர்கள் எத்தனை பேர் பொதுமக்கள் எத்தனை பேர் என கணக்கிடப்படவில்லை.’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.